P. Jayaraman

JAIHO INTERIORS

Blogger

P. Jayaraman

JAIHO INTERIORS

Blogger

Achievements

வணிகம் வழங்கும் சாதனை சிகரங்கள் 17

Chaper - CC1

Catalog – Business Consulting
ஒரு சிலர் நம்மிடம் பேசும் பொழுது நேரம் போவது தெரியாமல் அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நமக்கு தோன்றும் அப்படி, நான் பார்த்ததில் இருவர் எனக்கு அனுபவம் உண்டு. எப்பொழுதும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மாற்றங்களை பற்றிய எண்ணிலடங்கா விஷயங்களை பேசும் திரு. கார்த்தி (Idea mart) நிறுவனர் அவர்கள், மற்றொருவர் திரு ஜெயராமன் (Jai Ho Solutions) அவர்கள். இவர் சந்தையில் நமது பொருளை எப்படி விற்பனை செய்வது என்பதை கற்று தரும் கைதேர்ந்த ஆலோசகர்.

திரு ஜெயராமனை பற்றிதான் இந்த வார சாதனை சிகரங்கள் …

நல்ல மண்ணில் இடப்படும் விதை சோடை போவதில்லை என்பதற்கிணங்க…. வடசென்னையில் திரு, பரமசிவம் ( Retired Sub divisionial engineer BSNL) திருமதி சுகுணா தம்பதியர்களுக்கு 08/06/1985 அன்று பிறந்தார். ஒரே மகன்.

பள்ளிப்படிப்பு :- +2, வரை SRDKVVJC பள்ளி (2003) Thiruvottriyur .

பட்டப்படிப்பு ;- B.Com (2003-2006) SCP ஜெயின் கல்லூரி. M.Com (marketing) (2006-2008) இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி. MBA(2010) தொலைதூரக் கல்வி அண்ணாமலை பல்கலைக்கழகம். PGCOB படிப்பு ICFAI பல்கலைக்கழகத்தில். ICWA படிப்பு முழுமையாக முடிக்கவில்லை.

M.COM படிக்கும்போது பகுதி நேர வேலை செய்தார். அதாவது 2007 -ல் Intouch Construction and Infrastructure Pvt Ltd என்ற நிறுவனத்தில் Marketing Executive 4000 ரூபாய் சம்பளத்திற்கு இணைந்து 2009-ல் Sr. Marketing Executive வாக பதவி உயர்வு  பெற்றார். தொடர்ந்து 10 கோடி வரை விற்பனை உயர்த்தியதலும் ஒரே வருடத்தில் 25 அடுக்கு மாடிகள் 20 தனி வீடுகள் விற்று சிறந்த விற்பனை நாயகனாக 2010 -ல் Assistant Manager உயர்ந்தார்.

விரைவில் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம் என்று பார்த்தால், பள்ளி படிக்கும் போதே இந்த மாணவன் தன்னுடைய மாமா கடையில் விடுமுறை நாட்களில் cool drinks, Rasana, Water packet , Color ice strip  போன்ற பொருட்களை விற்க யாரிடம் எப்படி பேசுவது என்ற திறமையை கொண்டிருந்தார்.  பிறகு 2013 -ல் Ashpra Interiors Pvt Ltd என்ற நிறுவனத்தில் Product Development Manager ராக வீடு மற்றும் அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின்  Turnkey Interior வேலையை கவனித்து வந்தார். இங்கும் இவர் வாடிக்கையாளர்களை சிறந்த முறையில் அணுகி திறம்பட செயல்பட்டார் அதனால்  இவருக்கு அந்த வாடிக்கையாளர்கள் மூலமாகவே பரிந்துரை தொழில் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. 2014-ல் மனைவியின் பிரவசத்திற்காக உடன் இருக்க வேண்டியதால் வெளியேறினார்.

2014-15 வரை Insign – Designer Space இந்த நிறுவனத்தில் Project ல் இருக்கின்றவர்களை கவனித்து அவர்கள் முலம் Target யை நிறைவேற்றினார். ( மேலும் இந்த நிறுவனத்தில் working partner இருக்கிறார்.)

2015 – 17 வரை Krishna Engineering என்ற நிறுவனத்தில் Marketing. Manager and Management Representative வாக 5 கிளைகளையும் அதன் கீழ் இயங்கும் 15 Marketing Executive களையும் கவனித்து நிறுவனத்தின் திட்டமிட்ட Target  அடைய கடுமையாக உழைத்தார். ஒரே வருடத்தில் 20 கோடி இலக்கையும் அடைந்தார். திருமணம் நடக்கிறது செல்வி. ரேவதியை கரம் பிடிக்கிறார்( 2012 got married April 25th) . Jethandar என்ற மகன் பிறக்கிறார்.

நான் ஏன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார்.

ஒரு பொருளை சந்தை படுத்துவதிலும் ஒரு தொழில் நிறுவனத்தை முன்னுக்கு கொண்டு வருவதிலும் தனக்கு அனுபவம் இருப்பதாக கருதினார். அவர் கருதுவது உண்மை என்பதை மேலே உள்ள நிறுவனங்களில் அவர் வேலை செய்த விதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.  அந்த யோசனையில் முழுகி அவர் கண்டெடுத்த முத்து தான் இந்த JAI HO SOLUTIONS (2017)இது ஒரு Business consulting Service  Company.

இதற்கு முன்னரே அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து JaiHo Interior –   நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இவரது Jaiho Solutions நிறுவனத்தின் சேவைகள் என்னவென்று பார்த்தால்,  ஒரு நிறுவனத்தின் தரத்தையும், வருவாயையும் உயர்த்தி செலவை குறைத்து அடுத்த படி நிலைக்கு கொண்டு வருவதும்,அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை திட்டமிட்டு தந்து அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது இவர்களின் நோக்கம்.

குறிப்பாக ஒரு வருடத்திற்கு ஐந்து கம்பெனிகளை தேர்வு செய்துகொண்டு அந்த கம்பெனிகளின் வருடாந்திர வருமானத்தை உயர்த்தி செலவை குறைத்து இலக்கை அடைய செய்வதே இவர்களின் வேலை.  அப்படி 2019-ல் Geometrics Space Structures – கோயம்பத்தூர் என்ற நிறுவனத்தின்  வருமானத்தை 12 கோடியாக ஒரே வருடத்தில் உயர்த்தினார். அதற்க்காக Top Perfomer the year Award கிடைத்தது. ஆலையம் குரூப்ஸ் (Engineering & Construction)  நிறுவனத்தின் 50 லட்சத்தை ஒரே வருடத்தில் 2 கோடியாக உயர்த்தினார்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை ( குறள் 512)

விளக்கம் : நிதி ஆதாரத்தை மேம்படுத்த வழிகளை ஆராய்ந்து, தன் நிறுவனத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்தி, வணிகத்தில் ஏற்படுகின்ற இடையூறுகளை களைவது மிக அவசியம் என்கிறார் வள்ளுவர்.

இந்தக் குறல் விளக்கம் செயலைத்தான் செய்கிறார் நமது திரு ஜெயராமன் Jai Ho Solutions.

தனது தொழில் நடைமுறைக்கு முன்னோடியாக இவர் கருதுவது திருபாய் அம்பானியும் முகேஷ் அம்பானியின் தான்..அவர்களின் ஒவ்வொரு செயல்களும் இவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது.

வரும் காலங்களில் அம்பானியின்  நிறுவனத்தைப் போலவே JaiHo Jayaraman   நிறுவனமும் Service Provider துறையைச் சார்ந்த அனைவரையும்  ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே இவரது நோக்கம் லட்சியம்.

இவரின் லட்சியத்தை அடைய வாழ்த்துகிறது வணிகம்.

தனது நிறுவனத்தை முன்னுக்குக் கொண்டுவர நினைக்கும் ஒவ்வொருவரும் அணுகவேண்டிய நிறுவனம்தான் Jai Ho Solutions.

அடுத்த வருடம் இவர்களின் விற்பனை  இலக்கு 30 கோடி. ( For our associated clients or customers)

இவரை தொடர்பு கொள்ள…
திரு. ஜெயராமன்
8870837768
jayaraman@jaihosolutions.com

எழுதியவர்
கார்த்திகேயன். வ
Impress interior and exterior – MD
Article Coordinator